என் அப்பா அரசியல்வாதி அல்ல.. ஆடு மேய்ப்பவர்!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்!! 

0
731
My father is not a politician.. He is a shepherd!! Annamalai obsession of BJP leader!!

என் அப்பா அரசியல்வாதி அல்ல.. ஆடு மேய்ப்பவர்!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்!!

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தனிப்பெரும்பான்மையாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கட்சி தனிபெரும்பான்மையை இழந்து 240 இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது.  மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியாக 293 இடங்களை வென்றுள்ளது. இதனால் மத்தியில் கூட்டணி ஆட்சியாக பாஜக ஆட்சி அமையவிருக்கிறது.

தமிழ்நாட்டில் பாஜக சார்பில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை 4,50,132 பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.  திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட சிங்கை ராமச்சந்திரன்2,36,490 பெற்று மூன்றாம் இடத்தை பெற்றார்.

 இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கனிமாெழி பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது அண்ணாமலை கனிமொழியை பற்றி பிரதமர் பற்றி பேசுவதற்கு கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது. பிரதமர் மோடியை பற்றி பேச வேண்டும் என்றால் அதற்கு தகுதி வேண்டும். அந்த தகுதி கனிமொழிக்கு இல்லை. முதலில் அவர் கண்ணாடியை பார்த்து பேச பழகிகொள்ள வேண்டும். என அண்ணாமலை கருத்து தெரிவிக்க, அதற்கு பதிலடியாக கனிமொழியும் கருத்து தெரிவிக்க இவ்வாறாக தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளராக கனிமொழி 2 வது முறையாக போட்டியிட்டு சுமார் 540729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி அண்ணாமலை என்னை பார்த்து எப்பொழுதும் ஒரு கேள்வி கேட்பார், எனக்கு கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது என்று. இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்த தகுதி கூட இல்லாத அண்ணாமலை அந்த கட்சியில் இருப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல என கூறியிருந்தார்.

கனிமொழியின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை என் அப்பா அரசியல்வாதி இல்லை. ஆடு மேய்பவர் மற்றும் விவசாயி. என் அப்பா கருணாநிதி போன்று அரசியலில் இருந்திருந்தால் நானும் வெற்றி பெற்றிருப்பேன். கனிமொழி பாஜகாவில் இணைந்தால் நான் கட்சியில் இருந்து விலக பரிசீலனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், என் அப்பா குப்புசாமி நேர்மையுடனும், நியாயத்துடனும், பொறுமையாக சென்றால் நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறுவாய் என தெரிவித்துள்ளார் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.