பிக் பாஸ் சீசன் 2 வில் கவின் மற்றும் லாஸ்ட்லியா இருவரின் உடைய காதல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின் தொகுப்பாளினி மற்றும் நடிகையான லாஸ்ட்லியாவினுடைய தந்தை பிக் பாஸ்க்குள் வந்து காதலிப்பதற்காக தான் இங்கு வந்தாயா எனக் கேட்டவுடன் லாஸ்லியா கவின் உடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
பிக் பாஸ் சீசன் 2 சமயத்தில் லாஸ்ட்லியா அவர்களுக்கு மிகப்பெரிய பேன் பேஜ் கிரியேட் ஆனது. பிக் பாஸ் ஐ விட்டு வெளியே வந்த பின்பு தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்த ஆசிரிய பல திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பிக் பாஸ் சீசன் 2 நடைபெற்ற சமயத்தில் லாஸ்ட்லியாவின் உடைய தந்தை 10 வருடங்களுக்குப் பிறகு கனடாவில் இருந்து வந்ததாகவும் தன் மகளை காண வேண்டும் என கேட்டதற்கு விஜய் டிவி மறுக்கவே வேறுவழியின்றி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அவர் வந்து சென்றதாகவும் அதுதான் தன்னுடைய தந்தையை பார்த்த கடைசி தருணம் எனவும் கண்கலங்கி பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் நடிகை லாஸ்லியா.
பிக் பாஸ் சீசன் 2வை விட்டு வெளியே வந்த பொழுது மீண்டும் தன்னுடைய தந்தை கனடாவிற்கு சென்று விட்டதாகவும் அதன் பின் கனடாவில் இருந்து தன் தந்தையினுடைய உடல் மட்டுமே இலங்கைக்கு வந்ததாகவும் தெரிவித்தவர் தன்னுடைய தந்தை உயிருடன் இருந்த பொழுது அவரிடம் மிகுந்த சேட்டையை தான் புரிவதாகவும் தற்பொழுது அவர் இல்லை என்றால் கூட அவருடைய செல்போன் எண்ணிற்கு தான் அடிக்கடி கால் செய்வதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்திருப்பது ரசிகர்களை கலங்க வைப்பதாக உள்ளது.