Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சொல்லவே வாய் கூசுது!.. காங்கிரஸ் பைரவம் தொகுதி தலைவரே இந்தச் செயலை செய்யலாமா?..

My mouth is watering!.. Can Congress Bhairavam Constituency President do this?..

My mouth is watering!.. Can Congress Bhairavam Constituency President do this?..

சொல்லவே வாய் கூசுது!.. காங்கிரஸ் பைரவம் தொகுதி தலைவரே இந்தச் செயலை செய்யலாமா?..

எரணாகுளத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் ராஜா.இவருடைய வயது 37. இவர் முழங்குருத்தி  பெரும்பில்லி ராஜ்பவன் வெட்டிக்காட்டிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று  முளந்துருத்தி போலீசார் கைது செய்தனர். இவர் வீட்டில் தனியாக இருந்து வரும் பெண்களை குறி வைத்து இந்த செயல்களை நடத்தி வந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் முளந்துருத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் முளந்துருத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த குற்றவாளியை விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் இவர் காங்கிரஸ் பைரவம் தொகுதியில் தலைவராக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அந்தப் பெண்ணின் புகாரின்படி தற்காலிக பணியாளரான தனது அரசு வேலையை உறுதியாக வாங்கி தருவதாக கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை புகைப்படங்கள் எடுத்தும் மற்றும் வீடியோவாகவும்பதிவு செய்தும் வலுக்கட்டாயமாக  சமூக வலைத்தளத்தில் பகிர்வதாக மிரட்டி வந்துள்ளார். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக இந்த அச்சுறுத்தல் தொடரை செய்து வந்துள்ளார். பணம்,நகை ,செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் இந்த இளைஞரை போலீசார் குற்றவாளியாக உறுதி செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைவராகவே உள்ள இவர் இச்செயலை செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Exit mobile version