சினிமாவில் நடிப்பது என் மனைவிக்கு பிடிக்கவில்லை!! மனம் திறந்த திரையுலக உச்ச நட்சத்திரம்!!

0
135
My wife doesn't like acting in movies!! The highest star of the film world with an open mind!!

தமிழ் திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். தன் கடின உழைப்பால் திரைத்துறையில்  சாதித்தவர் ஆவார. இவர் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக  தன் உடலை வருத்தி நடித்தவர். இயக்குனர் பாலா இயக்கத்தில் இவர்  நடித்து  1999 ஆண்டு வெளியான படம்  “சேது” . இந்த படமே அதற்கு சாட்சி. மேலும் சாமி, தூள், ஐ, பொன்னியின்  செல்வன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர்.

சமீபத்தில்  இவர் நடிப்பில் வெளிவந்த “தங்கலான்” வெற்றி படமாக  அமைந்தது. நடிகர் விக்ரம் ஷைலஜா என்பவரை காதலித்து 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிகளுக்கு துருவ் என்ற மகனும் , அக்சிதா என்ற மகளும் உள்ளார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணலில் தன் மனைவி குறித்த தகவல் ஒன்றை தெரிவித்து இருந்தார். அதில், கல்வியாளர்கள் குடும்ப பின்னணியை கொண்டவர்தான் என் மனைவி  ஷைலஜா.

 என் மனைவிக்கு தான் படத்தில் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், அதனால் ஆரம்ப கட்டத்தில்  நான் சினிமாவில் நடிப்பதை வெறுத்தார். நான் சினிமாவை விடுவதாக இல்லை, பிறகு தன்னை புரிந்து கொண்டு உறுதுணையாக இருக்கிறார். நான் இந்த இடத்தில் இருக்க காரணமா உள்ளவர்  அவர் மட்டுமே. என்று தன் மனைவி குறித்து பேசினார் நடிகர் விக்ரம் .