Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிசிடிவி காட்சிகள் ஏன் இல்லை?மிஷ்கின் சொல்லும் அடடே விளக்கம்!

சிசிடிவி காட்சிகள் ஏன் இல்லை?மிஷ்கின் சொல்லும் அடடே விளக்கம்!

சைக்கோ படத்தில் கொலை நடக்கும் இடங்களில் ஏன் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை என்பது குறித்து இயக்குனர் மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை விமர்சனம் செய்த ஒரு சில விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருப்பதாக கூறினர். குறிப்பாக இத்தனை கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரன் ஒரு சிசிடிவி கேமராவில் கூட மாட்டவில்லைஎன்றும் எங்குமே சிசிடிவி கேமரா இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார். அதுபோல ரசிகர்களும் இதுபோல படத்தில் உள்ள லாஜிக் குறைகளை குறிப்பிட்டு பேசி வருகின்றனர்.

இதற்கு மிஷ்கின் ரசிகர்கள் மற்றும் உதயநிதி போன்றவர்கள் விளக்கம் அளித்து வரும் வேளையில் மிஷ்கினே அதுபற்றி விளக்கமளித்துள்ளார். பட ரிலிஸுக்குப் பின் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது சம்மந்தமாக கேள்வி எழுப்பப்பட்ட போது ’படத்துல சிசிடிவி இல்ல. அதனால் என்ன இப்போ? தியேட்டர்ல கொலைகாரன் கொலை எப்படி பன்றான்னு பாக்காம? ஏன் சிசிடிவிய தேடுறீங்க. ஒரு கொலைகாரன் கொலை செய்யும் போதோ அல்லது கடத்தும் போதோ அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அப்புறப்படுத்திட்டுதான் செய்வான். அத நீங்கதான் புரிஞ்சிக்கணும். என்னுடைய துப்பறிவாளன் படத்துல சிசிடிவி காட்சிகள வச்சுதான் கதைய நகர்த்துனேன்.

அதனாலதான் சைக்கோ படத்துல் சிசிடிவி கேமரா சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கிட்டோம். ஒவ்வொரு கொலைக்கும் சிசிடிவி காட்சிகள காட்டிட்டே இருந்தா உங்களுக்கே போரடிக்காதா? அதையெல்லாம் நீங்களேதான் புரிஞ்சுக்கணும்.  படத்துல நான் சொல்றது 50 சதவீதம். மீதி 50 சதவீதத்த நீங்கதான் புரிஞ்சுக்கணும்’ என விளக்கமளித்துள்ளார். கூறியுள்ளார்.

Exit mobile version