Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!!

#image_title

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!!

தர்மபுரி மாவட்டம் கிராமம் ஒன்றில் மர்ம விலங்கு ஒன்று நடமாடி வருவதால் மக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒலிப் பெருக்கி மூலமாக அறிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் படகாண்டஅள்ளி என்ற கிராமம் ஒன்று உள்ளது. இங்கு மலைப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மர்ம விலங்கு ஒன்று அந்த கிராமத்தில் நடமாடி வருகின்றது. மேலும் அந்த மர்ம விலங்கு கிராமத்தில் வளர்க்கப்படும் ஆடு, கோழி, நாய் ஆகியவற்றை கடித்து சென்றது.

இதையடுத்து திடீரென்று மலை உச்சியில் ஒரு விலங்கு நிற்பது போன்ற இருந்தது. மக்கள் இதை புகைப்படம் எடுத்தனர். மேலும் உத்தி பார்த்த பொழுது அந்த மர்ம விலங்கு சிறுத்தை என்பது தெரிய வந்தது. இதையடுத்து பாலக்கோடு வனத்துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது குறித்து மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின். அடிப்படையில் சாமனூர் பகுதியிலும் படகாண்டஅள்ளி பகுதியிலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த கண்காணிப்பு பணியின் பொழுது சிறுத்தையானது இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கு வந்து செல்வதை உறுதி செய்தனர்.

இதையடுத்து பாலக்காடு வனச்சரகர் நடராஜ் அவர்களின் தலைமையிலான வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் ஒலிப் பெருக்கி மூலமாக மக்கள் யாரும் இரவு நேரங்களில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் யாரும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் தாங்கள் வளர்க்கும் பிராணிகளை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அது மட்டுமில்லாமல் சிறுத்தையால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வனத்துறையினர் சார்பில் உரிய இழப்பு வழங்கப்படும் என்றும் வனவிலங்கு அச்சுறுத்தல் இருப்பதாக நினைத்து வனவிலங்கு நடமாட்டம் இருக்கும் பகுதியில் மின்சாரம் வைப்பது, வெடிகுண்டுகள் வைப்பது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபட வேண்டாம் என்றும் அவ்வாறு விலங்குகளுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Exit mobile version