ஜலிஸ்கோ மாநிலம் மெக்சிகோவில் உள்ளது. இதில் கடந்த சில வாரங்களாக மர்மமான முறையில் மனிதர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அமைதியை இழந்து மன நிம்மதி அற்று இருந்து வருகின்றனர்.
தற்போது ஜலிஸ்கோ பகுதியில் ஏன்? எதற்காக? என்று காரணம் ஏதுமின்றி திடீரென்று காரில் வந்த சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் யார் என்று குறிப்பிடாமல் தாறுமாறாக துப்பாக்கியில் தாக்கியுள்ளனர்.
இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தினால் மூன்று நபர்கள் பெருமளவில் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு ஜலிஸ்கோவில் உள்ள guadalajara என்னும் இடத்தில் மர்மமான முறையில் மனித உடல் வெட்டப்பட்டு துண்டுத்துண்டாக பிளாஸ்டிக் பையில் கிடந்துள்ளது.
இவ்வாறாக மெக்சிகோவில் வரம்பு மீறி வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நடந்து வரும் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர். இயல்பாக அவர்களால் வெளியில் செல்ல இயலவில்லை. இது குறித்து அந்நாட்டு அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.