திருச்சி புதூர் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட மேரி என்ற பெண் ஒருவருக்கு தினமும் அங்குள்ளவர்கள் உணவு கொடுத்து வந்துள்ளனர்.பின்னர் அந்தப் பெண் சாப்பிட்டுவிட்டு அங்கேயே ஏதோ ஓரிடத்தில் தங்கி விடுவார்.
இந்நிலையில் சில நாட்களாக உணவு கொடுத்து வரும் சமூக ஆர்வலர்கள், மேரிக்கு இரவு உணவு கொடுத்த தேடியபோது அவரை காணவில்லை. ஆனால் காலையில் சாலையோரத்தில் அரை மயக்கத்துடன் கிடந்துள்ளார். அப்போது மேரியை பார்ப்பவர்கள் மேரி தூங்குகிறார் என்று நினைத்தேன் விட்டுவிட்டார்கள்.
இந்நிலையில் வழக்கம்போல் அவர் சம்பவத்தன்று மேரிக்கு சாலையில் படுத்து கிடந்த பொழுது சாலையில் செல்பவர் பார்த்து விட்டு சென்றுள்ளார்.
இதனை கண்ட அருகில் இருந்த உணவு சமைக்கும் கார்த்தி என்பவர் அருகில் சென்று பார்த்தபோது, மேரியன் உடலில் உடைகளை கிழிக்கப்பட்டு, உடல் முழுவதும் ரத்த கீரளுடன் கிடந்துள்ளார்.இதனையடுத்து, அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், அவரை மயக்கத்திலிருந்து தெளிந்த உடன் விசாரித்தபோது, இரவில் ஒரு கும்பல் அவரை தூக்கிச் சென்று காலையில் மயக்க நிலையில் கொண்டு வந்து சாலையில் போட்டு விட்டது தெரியவந்தது.
மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.