Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு

Naai Sekar Returns

Naai Sekar Returns

நீண்ட இடைவெளிக்கு பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவை ஆட்சி செய்த வடிவேலு சில பிரச்னைகளால் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.

Naai Sekar Returns

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் வரும் 9-ம் தேதி திர்ரையங்குகளில் வெளியாக உள்ளது. Vadivelu (வடிவேலு) கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் விஜய் டிவியில் பிரபலமான குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வடிவேலுவை மீண்டும் திரையில் காணவிருப்பதை நினைத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் காமெடி, குணச்சித்திரம் மட்டுமின்றி ஹீரோவாகவும் வடிவேலு களமிறங்கியுள்ளார்.

சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தொழில்நுட்ப பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இன்று மாலை சன் டிவியின் யூட்பூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது

Exit mobile version