Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீமான் ரஜினி சந்திப்பு.. 2 மணி நேர மீட்டிங்!! எத்தனை குமுறல்கள்?? வெளியான முக்கிய தகவல்!!

Naam Tamilar Party executive Idumbavanam has released important information about the meeting with Rajini Seeman.

Naam Tamilar Party executive Idumbavanam has released important information about the meeting with Rajini Seeman.

Rajinikanth Seeman: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும்  சீமான் சந்திப்பு குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் சீமான் சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். இது சினிமா மற்றும் அரசியலில் பெருமளவு பேசும் பொருளாக மாறியது. இவ்வாறு இருக்கையில் இவர்கள் சந்திப்பு குறித்து தற்பொழுது நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகி இடும்பாவனம் இது குறித்து அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். ரஜினியின் வேட்டையன் படம் வெற்றியடைந்ததற்கு சீமான் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இவ்வாறு  அவர் வாழ்த்து சொன்னதற்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருந்தார். ஆனால் ரஜினி, சீமானை நேரில் சந்திக்க வேண்டுமென்று நினைத்தார். ஆனால் சரிவர சந்திக்க முடியவில்லை. சீமானுக்கு  அரசியல், ரஜினிக்கு திரைப்பட ஷூட்டிங் என பிசியாகவே இருந்தனர். இதனால் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. மேற்கொண்டு சீமான் பிறந்தநாளன்று சந்திக்க வேண்டியிருந்தது, ஆனால் முடியவில்லை.

அதன் பிறகு தான் நேற்று சந்தித்துள்ளனர். இருவருக்குமிடையே 2 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சினிமா அரசியல் என அனைத்தையும் பற்றி பேசினர். ஆனால் அரசியல் ரீதியான எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லை. இதை சிலர் தங்களின் சொந்த கருத்தை போட்டு எழுதி வருகின்றனர். இவர்கள் சந்திப்பால் கட்சி ரீதியாக் எந்த ஒரு மாறுதலும் வரப் போவதில்லை.மரியாதை ரீதியான சந்திப்பாகத் தான் இது உள்ளது.

இருவரும் தங்களது அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் இதற்கு எவ்வளவு கட்டுக்கதைகள், கற்பனை வாதங்கள்? எத்தனை கருத்துவாக்கங்கள்? எத்தனை கதறல்கள்?? குமுறல்கள் என கேட்டுள்ளார்.

Exit mobile version