நேற்று காலை முதலே நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரின் திருமண கொண்டாட்டங்கள் அரம்பமாகிவிட்டன.ஒரு பக்கம் இவர்களின் திருமண சடங்குகள் நடக்க, மற்றொரு பக்கம் சமந்தா சோகத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அப்பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது :-
தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமந்தா ஒரு இன்ஸ்டா ஸ்டோரியைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க நடிகையும் தயாரிப்பாளருமான வயோலா டேவிஸ் முதலில் வெளியிட்ட வீடியோவை சமந்தா தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு சிறுமி தனது எதிரியான சிறுவனுடன் சண்டையில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது. சிறுவன் அழுது கண்ணீர் சிந்த, சிறுமி சண்டையில் வெற்றி பெறுவதுடன் வீடியோ கிளிப் முடிகிறது.
” #FightLikeAGirl (ஒரு பெண்ணைப் போல சண்டையிடுங்கள்) ” என்ற ஹேஷ்டேக்குடன் சமந்தா இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ அவரது முன்னாள் கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு மறைமுகமான எதிர்வினையா என்று ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
சைதன்யாவும் சமந்தாவும் தங்கள் நான்காவது திருமண நாளுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்தச் செய்தி அவர்களின் ரசிகர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அப்போதிருந்து, சைதன்யா பெரும்பாலும் விவாகரத்து பற்றி பேசாமல் இருந்தார். ஆனால் சமந்தா அந்த அனுபவம் கசப்பானது என்று வெளிப்படையாகக் கூறிவிட்டார்.