Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா

”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா

நடிகர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதியினர் விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் இன்னமும் பேசுபொருளாகியுள்ளது.

முன்னணி நடிகர்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்காண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்த விவாகரத்துக்கு காரணம் என்று பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் வேண்டிக்கொண்டனர்.

இந்நிலையில் விவாகரத்துக்குப் பின் நடிப்பில் பிஸியாகியுள்ள சமந்தா வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட்டின் பிரபல ரியாலிட்டி ஷோவான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது தன்னுடைய விவாகரத்து மற்றும் அதன் பின்னான வாழ்க்கை குறித்து பேசிய அவர் “ திருமண வாழ்க்கையில் இணக்கமான சூழல் இல்லை என்றால் பிரிவதை தவிர வேறு வழியில்லை.  கூர்மையான பொருட்கள் மறைந்திருக்கும் ஒரு அறைக்குள் இருவரும் இருப்பது போன்று இருந்தது. முதலில் இந்த முடிவு கடினமாக இருந்தாலும் சரியானதாக இருந்தது.  இப்போது இயல்பு நிலையை எட்டியுள்ளேன். மேலும் வலிமையாக இருப்பதாகவும் உணர்கிறேன். ” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது நாக சைதன்யாவும் இதுபற்றி பேசியுள்ளார். அதில் “நாங்கள் இருவருமே அதைவிட்டு வெளியேறிவிட்டோம். இன்னமும் அதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது எனக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. எனது தனிப்பட்ட வாழ்க்கை தலைப்பு செய்தியாவது எனக்குப் பிடிக்கவில்லை. விவாகரத்து பற்றி நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version