நாக சைதன்யாவின் திருமணத்திற்கு வராத தாய்!! காரணம் இதுதான்!!

0
198
Naga Chaitanya's unmarried mother!! This is the reason!!

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நாகார்ஜுனா. இவர் பல பிரமாண்ட படங்களை நடித்துள்ளார். இவர் முதலில் லட்சுமி என்பவரை மணந்துள்ளார். இந்த தம்பதியருக்கு பிறந்தவர் தான் நடிகர் நாக சைதன்யா. பின்னர் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

பின்னர் நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் தான் அகில். நாகார்ஜுனாவின் முதல் மனைவியான லட்சுமி, சரத் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார்.

நாக சைதன்யாவும் பிரபலமான தெலுங்கு நடிகர் ஆவார். விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவும், சமந்தாவும் நடித்து வந்தனர். அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் வாழ்க்கை சுமுகமாக செல்லவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர்.

நாக சைதன்யா விவாகரத்தான பின் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்களோடும், நெருங்கிய திரையுலக பிரபலங்கள் முன்னிலையிலும் டிசம்பர் நான்காம் தேதி இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் ஸ்ரீசைலம் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். அந்த புகைப்படங்களும் வலைத்தளங்களில் ட்ரெண்டாகின.

நாகார்ஜுனாவின் முதல் மனைவி லட்சுமி, நாக சைத்தான்யா, சமந்தா பிரிவதில் விருப்பமில்லை என்றும், இதனால்தான் சைதன்யா சோபிதா நிச்சயத்திற்கு வரவில்லை என்றும் வலைதளங்களில் பரவியது. இச்செய்தி உண்மை இல்லை என்றும், இது வதந்தி என்றும் லட்சுமி தெரிவித்தார். தன்னுடைய மகனான சைதன்யாவின் கல்யாணத்திற்கு தனது கணவர் சரத்துடன் கலந்து கொண்ட புகைப்படத்தை வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது போன்ற வதந்திகளை யார் தான் கிளப்பி விடுகிறார்கள் என்று நெட்டிஷன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.