Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் இந்த படத்துக்கு செட் ஆகமாட்டாரு என சண்டை போட்ட நாகேஷ்! பல வருடம் கழிந்து வெளியா உண்மை!!

#image_title

விஜய் இந்த படத்துக்கு செட் ஆகமாட்டாரு என சண்டை போட்ட நாகேஷ்! பல வருடம் கழிந்து வெளியா உண்மை!!

நடிகர் விஜய் அவர்கள் ஒரு படத்திற்கு சரிப்பட்டு வரமாட்டார் அவரு இந்த படத்திற்கு வேண்டாம் என்று மறைந்த நடிகர் நாகேஷ் அவர்கள் கூறியுள்ளார். அது எந்த படம் எதனால் கூறினார் என்பது பற்றி பார்க்கலாம்.

நடிகர் விஜய் தற்பொழுது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக உயர்ந்துள்ளார். நடிகர் விஜய் நடித்தால் குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் 100 கோடி ரூபாயை வசூல் செய்து விடும் என்பது நம்பிகையாக உள்ளது. தற்பொழுது மிகப்பெரிய பட்ஜெட்டில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் பல அவமானங்கள் சந்தித்துள்ளார். அந்த வகையில் மறைந்த பிரபல பழம்பெரும் நடிகர் மகேஷ் அவர்கள் இந்த கதைக்கு நடிகர் விஜய் செட் ஆகிவிட்டார் என்ற சவால் விட்ட கதை எல்லாம் நடந்துள்ளது.

நடிகர் விஜய் அவர்கள் ஹீரோவாக இருந்த காலத்தில் மற்ற இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அவரை வைத்து படம் எடுக்க தயாராக இல்லாத போது நடிகர் விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் நடிகர் விஜய் அவர்களை வைத்து நாளைய தீர்ப்பு, ரசிகன், தேவா, மாண்புமிகு மாணவன் போன்ற திரைப்படங்களை இயக்கினார். அந்த வகையில் நடிகர் விஜய் அவர்களுக்கு முதன் முதலாக வாய்ப்பு கெடுத்தது இயக்குநர் விக்ரமன் அவர்கள் தான்.

இயக்குநர் விக்ரமன் அவர்கள் மூத்த நடிகர்களை வைத்து விஜய் அவர்களுடன் ஒரு திரைப்படத்தை இயக்கலாம் என்று முடிவு எடுத்து நடிகர்கள் நம்பியார் மற்றும் நாகேஷ் அவர்களிடம் கதை கூறியுள்ளார். காதையை கேட்டு முடித்த நடிகர் நாகேஷ் அவர்கள் “இந்த கதை முழுக்க முழுக்க கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாயாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் செட் ஆகமாட்டார். இது போன்ற கேரக்டரில் நடிகர் விஜய்க்கு நடிக்க வராது. எனவே நடிகர் விஜய் வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

இந்த கதையில் நடிகர் விஜய் செட் ஆகமாட்டார் என்று நாகேஷ் அவர்கள் கூறியதற்கு காரணம் நடிகர் விஜய் அவர்கள் இதற்கு முன்பாக கிளாமருக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்தது தான். ஆனால் நடிகர் நாகேஷ் கூறியதை கண்டுகொள்ளாமல் நடிகர் விஜய் மேல் நம்பிக்கை வைத்து இயக்குநர் விக்ரமன் அவர்கள் பூவே உனக்காக திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

இதையடுத்து நடிகர் விஜய் அவர்கள் பூவே உனக்காக திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருப்பார். நடிகர் விஜய் அவர்கள் பூவே உனக்காக படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் அவர்களுடைய நடிப்பை பார்த்த நடிகர் நாகேஷ் அவர்கள் மிரண்டு போயுள்ளார். இந்த படம் நாகேஷ் அவர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டு மெத்த சினிமா ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்த திரைப்படமாக பூவே உனக்காக திரைப்படம் மாறி இருக்கின்றது.

பூவே உனக்காக திரைப்படம் நடிகர் விஜய் அவர்களின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது. இதன் பின்னர் நடிகர் விஜய் அவர்களுக்கு காதலுக்கு மரியாதை, லவ் டுடே, காலமெல்லாம் காத்திருப்பேன் போன்ற பல காதல் கதை திரைப்படங்கள் கிடைத்துள்ளது.

Exit mobile version