Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதலரை கரம் பிடித்தார் பிரபல சின்னத்திரை நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த யாரடி நீ மோகினி தொடரில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நட்சத்திரா.

இவர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் யாரடி நீ மோகினி தொடரில் நட்சத்திராவுடன் நடித்த நடிகை ஸ்ரீநிதி நட்சத்திரா திருமணம் தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதோடு அவரை கடத்தி வைத்திருப்பதாகவும், கட்டாய திருமணம் செய்யவிருப்பதாகவும், அவருடைய உயிருக்கே ஆபத்து என்றெல்லாம் பேசி இருந்தார்.

அந்த வீடியோவை இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீநிதியின் பேச்சை மறுத்து நட்சத்திரா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் காதலிக்கும் விஷ்வா என்பவர் ஜீ தமிழ் சேனலில் சில தொடர்களில் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் சினிமா தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ குடும்பத்துடனும் நெருங்கிய தொடர்பிலிருக்கிறார் விஷ்வா என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், விஷ்வா மற்றும் நட்சத்திர ஜோடியின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில், சென்ற சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நட்சத்திராவை தூக்கி வளர்த்த பாட்டனார் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். அவருடைய ஒரே ஆசை நட்சத்திராவை மாலையும் கழுத்துமாக பார்த்துவிட வேண்டும் என்பதுதான் என சொல்லப்படுகிறது.

அதன் காரணமாக தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குடும்ப கோவிலில் வைத்து வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் நட்சத்திரா மற்றும் விஷ்வா உள்ளிட்டோரின் திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்ததாக சொல்லப்படுகிறது. மிக விரைவில் சென்னையில் வரவேற்பு நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version