நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் மட்டுமின்றி வில்லனாக இருந்தாலும் இவருக்குத்தான் நாங்கள் ரசிகராக இருப்போம் என்று சொல்லக்கூடிய அளவு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், தமிழ் திரை உலகில் சின்ன சின்ன கதாபாத்திரங்களின் மூலம் நுழைந்து அதன் பின் ஹீரோவாக அவதாரம் எடுத்து அதன் பின் தன்னுடைய கதைகளை தேர்ந்தெடுத்த நடிக்கக் கூடியவராக திகழ்கிறார்.
இவருடைய ஆரம்ப வாழ்க்கையானது, பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றிருக்கிறார்.
இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை படத்துக்கு திறன் தேர்வு வைத்ததில் கலந்து கொண்டு தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பல வெற்றிகள் கிடைக்கும் நிலையில் உலக அளவில் தற்போது தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி சென்று கொண்டிருந்த சூழ்நிலையில்தான், சூது கவ்வும் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு விஜய் சேதுபதி அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இத்திரைப்படம் குறித்தும் இதில் விஜய் சேதுபதி அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்தும் சூது கவ்வும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
சூது கவ்வும் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தெரிவித்திருப்பதாவது :-
சூது கவ்வும் படத்தின் கதையை நலன் குமாரசாமி என்னிடம் சொன்னபோது விஜய் சேதுபதியை ஹீரோவாக போடலாம் என்று சொன்னேன். உடனே அவரோ இல்லை சார் வேண்டாம். நான் விஜய் சேதுபதியை இந்தக் கதையில் யோசிக்கவே இல்லை. லொள்ளு சபா மனோகரைத்தான் நினைத்திருக்கிறேன் என்று சொன்னார். பிறகு நான் ரொம்ப கஷ்டப்பட்டு அவரை ஒத்துக்கொள்ள வைத்தேன் என தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.