Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த அரசியல் தலைவர் குணமடைந்து வீடு திரும்பினார்!

சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குணமடைந்து வீடு திரும்பினார்.

சென்னை நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் குடியிருப்பில் வசித்து வருகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 94). தமிழக அரசியல் தலைவர்களில் மிகவும் எளிமையான ஒரு தலைவர் என்றால் அது இவர் தான்.

இவருக்கு சாதாரண காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டதால் கடந்த 21 ஆம் தேதி அன்று சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.

Exit mobile version