Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிறந்த குழந்தையை தலையில் அடித்து கொன்று புதைத்த கொடூர தாய்!! பெண் குழந்தை பிறந்ததால் கொலை!!

தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் அருகே பிறந்து ஒரு வாரம் ஆன குழந்தை தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பவத்திற்காக தாய் கைது செய்யப்பட்டு உள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி என்ற ஊரைச் சார்ந்த கஸ்தூரி என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்து உள்ளது.

ஏற்கனவே கஸ்தூரிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் இந்த நிலையில், மூன்றாவதாக சுகப்பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது தாய் கஸ்தூரி குழந்தையுடன் வீடு திரும்பியபின் ஏப்ரல் 12ஆம் தேதி குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறி, குழந்தையின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டனர்.

மேலும், பிறந்த குழந்தை ஒரு வாரத்தில் குறித்து சந்தேகம் ஏற்பட்டு சுகாதாரத்துறையினர் எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். அதன்பின் ஏப்ரல் 16ஆம் தேதி குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மேலும் உடற்கூறு ஆய்வு செய்ய பட்டது. அதனை அடுத்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஹைதராபாத் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மூன்று மாதங்களுக்குப் பின் அந்த ஆய்வின் முடிவுகள் வந்து சேர்ந்து உள்ளது.

அதில் குழந்தையின் தலையில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து குழந்தையின் தாய் கஸ்தூரியிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, மூன்றாவதும் பெண் குழந்தையாக இருந்ததால் தலையில் அடித்துக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். அதனை அடுத்து, அவரை கைது செய்த போலீசார் தாய் கஸ்தூரியை சிறையில் அடைத்தனர்.

மேலும், பெற்ற குழந்தையை தலையில் அடித்துக் கொன்ற காரணத்தினால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அதனை கண்டு மிகவும் கேட்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், பெற்ற குழந்தையை எவ்வாறு ஒரு தாயே கொல்ல முடியும் என்றும் கேள்வி கேட்டு மிக அதிருப்தியை தெரிவித்து உள்ளனர்.

பெண் குழந்தை பிறந்தால் அதனை அடித்துக் கொள்ள வேண்டும் என்று இல்லை, அதனை ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்து இருந்து இருக்கலாம் இப்படி கொன்று புதைக்க எவ்வாறு ஒரு தாய்க்கு இவ்வாறு மனதில் தோன்றியது என்று கேட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version