இலவச பயணம் எதிரொலி! தனியார் பேருந்து கட்டணம் குறைப்பு!

0
154

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் ஐந்து திட்டங்களில் கையெழுத்து போட்டார்.இதில் பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பானது தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எஸ் .எம் .ஆர் என்ற தனியார் பேருந்தில் பெண்களுக்கு சலுகை கட்டணத்தை அறிமுகம் செய்திருக்கின்றன. நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்வதற்கு தற்சமயம் வரை 15 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பெண்களுக்கு அதிக பட்ச கட்டணம் ரூபாய் இரண்டும் ஆண்களுக்கு சலுகைக் கட்டணமாக பத்து ரூபாயும் வசூல் செய்யப் படுவதாக பேருந்து நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

அதோடு இரண்டு ரூபாய் கட்டணமாக கொடுக்கும் பெண்கள் நாமக்கல் முதல் மாதம் வரையிலான பேருந்து நிறுத்தத்தில் எங்கிருந்து வந்தாலும் ஏறிக் கொள்ளலாம், இறங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். தற்சமயம் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் பேருந்து இயக்கப்படாத நிலையிலும் ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் இந்த கட்டண சலுகையுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று பேருந்து உரிமையாளர் குமரேசன் தெரிவித்திருக்கின்றார்.

அதோடு மட்டுமில்லாமல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த தைப்போல டீசல் மீதான தமிழக அரசு குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் குமரேசன்.