முக்கிய மூன்று மெட்ரோ நிலையங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பெயர்?

0
123

சென்னையில் கடந்த 2015 ஆண்டு முதல் மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்பட்டு, பின் பயன்பாட்டுக்கு வந்தது. மெட்ரோ ரயில் சேவை முலமாக பல்வேறு இடங்களிலிருந்து எளிதாக பயன்படுத்த வசதியாக அமைந்தது.

இந்நிலையில் சென்னையில் உள்ள மூன்று முக்கிய மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு தமிழக முன்னாள் முதல்வர்களின் பெயர்களை வைக்க இ.பி.எஸ் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு ‘அண்ணா பன்னாட்டு முளையம் ‘என மற்றியமைக்கப்பட்டது. அதைபோல ‘ஆலந்தூர் மெட்ரோ’ நிலையத்தை ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ நிலையமாக மாற்றியமைக்க முடிவு செய்துள்ளனார்.

மேலும் ‘புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டல் ரயில்நிலையம்’ போலவே சென்டரல் மேட்ரோவை ‘புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டரல் மெட்ரோ’என அழைக்கப்படும் என்று தெரிவத்துள்ளனர்.

கோயம்பேடு புறநகர் பேருந்துநிலைய மெட்ரோ நிலையத்துக்கு ஜெயலலிதா பெயரை வைக்க முடிவு செய்தனர்.’புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா புறநகர் பேருந்துநிலையம் மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாக இ.பி.எஸ் தெரிவித்துள்ளனர்.