ஒரு சிங்கம் எம்.எல்.ஏ.வாக வந்தால் எப்படி இருக்கும்..? அதனால் நீங்கள் அனைவரும் சிங்கமான போலீசாக பணியாற்றிய அண்ணாமலைக்கு வாக்களியுங்கள் என்று நடிகை நமீதா வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்கு சேகரிப்பு நாளுக்கு நாள் பரப்பரப்படைந்து வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக திரைப்பிரபலங்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. பாஜகவில் முக்கிய இடங்களில் நடிகை குஷ்பு, அண்ணாமலை ஐபிஎஸ், பொன் ராதாகிஷ்ணன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.
அண்மையில் பாஜகவில் குஷ்பு இணைந்தது போல நடிகை நமீதாவும் பாஜக பக்கம் சாய்ந்தார். தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும்பட்சத்தில் வாக்கு சேகரிப்பில் புதிய யுக்திகளை வேட்பாளர்கள் கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலையை ஆதரித்து நடிகை குஷ்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரவக்குறிச்சியில் திறந்த வெளி வாகனத்தில் பாஜக அதரவாளர்களுடன் சென்ற குஷ்பு, கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை அவரக்குறிச்சியில் வெற்றிப்பெற செய்தால் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் என்றும், சிங்கம் படத்தில் சூர்யா நடித்ததை வைத்து உங்கள் தொகுதியில் ஒரு சிங்கம் அதாவது போலீஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை ஐபிஎஸ் எம்.எல்.ஏவாக வந்தால் எப்படி இருக்கும்..? என கேள்வி எழுப்பினார்.
அனைவரும் பாதுகாப்புடன் வாழ அண்ணாமலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்ட நமீதா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இரும்பு பெண்மணி என புகழ்ந்தார்.