Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காரியம் வெற்றி பெற நந்தி விரதம்!

ஒரு ஆண்டில்365 தினங்களும் ஏ நந்தியை வழிபட்டு வருவது எந்தவிதமான தவறும் இல்லை ஆனால் வாழ்க்கையில் சந்தோஷம் வர வேண்டுமென்றால் விரதமிருந்து பிரதோஷ நாளில் வழிபாடு செய்ய வேண்டும். நந்தியம் பெருமாளையும், உமாமகேஸ்வரரையும், எந்தக் கிழமைகளில் வரும் பிரதோஷம் விரதம் இருந்து வழிபட்டால் என்ன விதமான பலன் கிடைக்கும் என்பதை பற்றி இங்கே நாம் தெரிந்துகொள்வோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும் வழிபிறக்கும் என்று சொல்லப்படுகிறது.

திங்கள் கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் மன சஞ்சலங்கள் நீங்கி மனதில் அமைதி பிறக்கும், நல்ல எண்ணங்கள் உருவாகும் என்று சொல்லப்படுகிறது செவ்வாய்க் கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் உணவு பற்றாக்குறை நீங்கி உத்தியோக வாய்ப்பும் பொருள் வருமானங்கள் பெருகும் என்று சொல்லப்படுகிறது.

வியாழக்கிழமைகளில் விரதமிருந்து வழிபட்டால் படிப்பில் இருந்த தடை நீங்கும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் செல்வ விருத்தியும் செல்வாக்கும் அதிகமாகும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version