Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘நானே வருவேன்’ திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்த இந்துஜா.!!

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் இளம் நடிகை இந்துஜா இணைந்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி தனுஷை வைத்து இயக்கவுள்ளார். இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது நடிகர் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். மேலும், தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை இந்துஜா நடிக்கவுள்ளார். நேற்று முன்தினம் நடந்த நானே வருவேன் படத்தின் பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர் தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Exit mobile version