Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாங்கள் விற்கவும் இல்லை! அவர் வாங்கவும் இல்லை! மறுப்பு தெரிவித்த ஈகுவடார்

நாங்கள் விற்கவும் இல்லை! அவர் வாங்கவும் இல்லை! மறுப்பு தெரிவித்த ஈகுவடார்

நாங்கள் விற்கவும் இல்லை! அவர் வாங்கவும் இல்லை! மறுப்பு தெரிவித்த ஈகுவடார்

நாங்கள் விற்கவும் இல்லை! அவர் வாங்கவும் இல்லை! மறுப்பு தெரிவித்த ஈகுவடார்

பெங்களூருவில் பிடதி ஆசிரமம் அமைத்து மக்கள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவாற்றி பிரபலமடைந்தவர் நித்தியானந்தா. இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு, சிறுமிகளை வசியப் படுத்துதல், பணம் நகைகளை அபகரிப்பது போன்ற பல்வேறு புகார்கள் இருக்கின்றன. இதுபோல பல்வேறு சர்ச்சைகளுக்கு பயந்து அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாகவும் தகவல்கள் உண்டு.

ஆனால் அவ்வப்போது இணையதளத்தில் தோன்றி தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வருகிறார் நித்யானந்தா.  சென்ற மாதத்தில் கூட தனது மகள்களை நித்தியானந்தா அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள் தற்போது நித்தியானந்தா ஒரு தீவையே விலைக்கு வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன . அதன்படி தென்னமெரிக்காவின் ஈக்வடார் நாட்டின் ஒரு தீவையே நித்தியானந்தா வாங்கி இருப்பதாகவும் அதற்கு அவர் கைலாசம் என பெயரிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த நாட்டின் தனிக்கொடி, இலட்சினை, பாஸ்போர்ட் போன்றவற்றை தயார் செய்து விட்டதாகவும் தகவல்கள் பரவுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த நாட்டை சட்டப்படி அங்கீகரிப்பதற்கு அங்குள்ள அரசு அதிகாரிகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் நித்யானந்தா தங்களது நாட்டில் தீவு எதையும் வாங்கவில்லை அப்படி எதனையும் நாங்கள் விற்கவும் இல்லை என்று ஈக்வடார் அரசு திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளது. நித்யானந்தர் ஈக்வடாரில் தனித் தீவு ஒன்றை வாங்கி விட்டதாகவும் அதற்கு “ரிபப்ளிக் ஆப் கைலாசம்” என்று பெயரிட்டு உள்ளதாகவும் அதற்கு தனி கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும். அந்தக் கொடியில் ஒரு பக்கம் நித்யானந்தா அமர்ந்திருப்பது போலவும் மறுபுறம் நந்தியும் இருக்கிறது என செய்தி சேனல்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்தி பரவ தொடங்கியது.

ஆனால் டெல்லியில் உள்ள ஈக்வடார் தூதரகம் இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. நித்யானந்தா அதுபோன்ற எந்த ஒரு தீவையும் தங்களிடமிருந்து வாங்கவும் இல்லை, தாங்கள் விற்கவும் இல்லை என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். நித்யானந்தா தன்னை ஒரு அகதியாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் வைத்ததாகவும் ஆனால் அதற்கு அரசு மறுப்பு தெரிவித்ததாகவும் அவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. மேலும் தற்போது நித்யானந்தா  தென் அமெரிக்காவின் “ஐதி” தீவிற்கு தப்பிச் சென்றிருக்க கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version