Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மானம் கெட்டவர்களே! உங்களுக்கு அதை பற்றி பேச தகுதி இருக்கிறதா? கொந்தளிக்கும் நாராயணன் திருப்பதி!

தமிழக காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே எஸ் அழகிரி தலைமையில் நடந்தது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அழகிரி அதிமுகவில் இருப்பவர்களால் எப்போதும் இந்த கொள்கையை ஏற்க முடியாது. அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், அவர்களை மறைமுகமாக இயக்கப் போவது அமித்ஷா மற்றும் மோடி உள்ளிட்டோர் தான் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக தற்போது பாஜக மற்றும் மோடியின் மறு உருவமாக இருக்கிறது. அதிமுக வேறு இயக்கத்தில் நடித்து தான் வருகின்றது. அதனால் தமிழகத்தில் பழைய வலிமையை அந்த கட்சி மீண்டும் பெற இயலாது என்று கே எஸ் அழகிரி விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், அவருடைய இந்த பேச்சுக்கு பாஜகவை சார்ந்த நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், சொந்த கட்சியின் தலைவரை கொலை செய்த குற்றவாளிகளை ஆரத் தழுவி வாழ்த்துபவர்களுடன் கூட்டணியை தொடரும் வெட்கம் கெட்ட காங்கிரஸ் கட்சிக்கு, முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களை கொண்டாடும் கட்சிகளுடன் கூட்டணியை தொடரும் மானம் கெட்ட காங்கிரஸ் கட்சிக்கு பாஜக, அதிமுக கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த விதமான தரமும் இல்லை, அதோடு தகுதியும் இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Exit mobile version