‘என்னப்பா இது…’ ஐசிசி அட்டவணையை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

0
166

‘என்னப்பா இது…’ ஐசிசி அட்டவணையை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் விரைவாகவே ஓய்வை அறிவிக்க ஐசிசியின் அட்டவணைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்களில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருபவர் பென் ஸ்டோக்ஸ். இவரின் பங்களிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கனவான உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று கொடுத்ததில் பென் ஸ்டோக்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று திடீரென ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் ஓய்வு குறித்து பேசுகையில் ‘அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட முடியவில்லை’ என்பது போல பேசியுள்ளார். ஐசிசி அடுத்த 5 ஆண்டுகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. இதில் ஐபிஎல் போன்ற தொடர்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் வரிசையாக கிரிக்கெட் வாரியங்கள் லீக் போட்டிகள் மற்றும் இருநாட்டு தொடர்களை நடத்துகின்றன.

இதன் காரணமாகவே ஸ்டோக்ஸ் அதிக போட்டிகளில் விளையாட முடியாமல் ஓய்வை அறிவித்திருக்கலாம். இதுபற்றி பேசியுள்ள முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன்’ஐசிசியின் அட்டவணை நகைச்சுவையாக உள்ளது. இவ்வளவு போட்டிகள் நடத்தினால் வீரர்கள் விட்டால் போதும் என்ற மனநிலையில்தான் இருப்பார்கள். நாம் கண்டிப்பாக நமது அட்டவணைகளை திருத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் போலவே இப்போது பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தனித்தனியாக லீக் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.