Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேசிய திறனாய்வு தேர்வு.. இன்று முதல் ஹால் டிக்கெட் வினியோகம்!!

National Aptitude Test.. Hall ticket distribution from today!!

National Aptitude Test.. Hall ticket distribution from today!!

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தேசிய திறனாய்வு தேர்வு எழுதி வெற்றி பெற்ற 1 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 6695 மாணவர்கள் இந்த தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற பயனடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது 8 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று முதல் விநியோகம் செய்ய தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டுகளை dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகையாக மாதா மாதம் 1000 ரூபாய் வழங்கி வரும் நிலையில் மத்திய அரசும் இதுபோன்ற தேசிய திறனாய்வு தேர்வுகளை மாணவர்களுக்கு நடத்தி அதில் வெற்றி பெறக்கூடிய மாணவர்களுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இந்த தேசிய திறனாய்வு தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருவதால் மாணவர்கள் இந்த தேர்தல் கலந்து கொண்டு தங்களுடைய கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version