Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறந்த நடிகருக்கான தேசிய விருது!!! புஷ்பா திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றார்!!!

#image_title

சிறந்த நடிகருக்கான தேசிய விருது!!! புஷ்பா திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றார்!!!

புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் அல்லு அர்ஜுன் அவர்கள் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை குடியரசுத்தலைவர் திருமதி முர்மு அவர்களின் கையால் பெற்றார்.

இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களுக்கு 2021ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தெலுங்கு சினி உலகில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் நடிகர் என்ற பெருமையை நடிகர் அல்லு அர்ஜூன் அவர்கள் பெற்றார்.

தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று(அக்டோபர்17) பிரம்மாண்டமாக டெல்லியில் நடைபெறும் என்றும் தேசிய விருது வழங்கும் விழாவிற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் தலைமை ஏற்று விருதுகள் வழங்குவார் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய விருது அறிவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூன் அவர்கள் தனது மனைவியுடன் நேற்று(அக்டோபர்16) டெல்லிக்கு சென்றார்.

இதையடுத்து தற்பொழுது டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய விருந்துகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜுன் அவர்கள் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கையால் சிறந்த நடிகருக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் பெற்றுக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் அவர்கள் செம்பரம்பாக்கம் விற்பனை செய்யும் நபராக நடித்திருந்தார். நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

புஷ்பா திரைப்படம் விமர்சனம் ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் வெற்றி பெற்றது. இதையடுத்து புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா தி ரூல் என்ற பெயரில் உருவாகி வருகின்றது. புஷ்பா தி ரூல் திரைப்படம் 2024ம் ஆண்டு சுதந்திர தினத்திற்கு வெளியாகவுள்ளது.

Exit mobile version