தேசிய கீதம் பாடி போராட்ட காரர்களை கலைத்த காவலர்?

0
128

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்ட களத்தில் இறங்கினர். சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மற்றும் நடிகர் சித்தார்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, டெல்லி, பெங்களூரு, சென்னை, லக்னோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி, மாணவர்கள், தொடர்ந்து பல்வேறு முறைகளில் போராடி வருகின்றனர் ரயில் மறியல் போன்ற போராட்டங்களும் நடந்தவண்ணம் உள்ளன.

இதனால பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை கலைக்க, காவலர் ஒருவர் வினோத முயற்சியை கையாண்டுள்ளார்.

போராட்டக்காரர்கள் மத்தியில் சிறிது நேரம் உரையாற்றிவிட்டு, இறுதியில் தேசிய கீதத்தை பாடியுள்ளார் அந்த காவலர். தேசிய கீதம் முடிந்ததும் போராட்டக்காரர்களும் அங்கிருந்து கலைந்துசென்றுள்ளனர்.

ஜல்லி கட்டு போராட்டத்தின் போது திருச்சியில் காவலர் ஒருவர் தடியடி நடத்தாமல் மாணவர்களை நல்ல பேசி அனுப்பியது போல் இந்த நிகழ்வு அனைவரிடமும் பாராட்டத்தக்க விஷயமாக பேசப்பட்டது.