பூர்விக நிலம்.. ஆனால் பட்டா வேறொருவர் பெயரில்!! இதனை சரி செய்ய இதுதான் வழி!!

0
136
Native land.. but the belt is in someone else's name!! This is the way to fix it!!

தற்பொழுது நடைமுறையில் உள்ள செயலான நிலம் வாங்கியவுடன் பட்டா பெயர் மாற்றம் செய்வது 80 மற்றும் 90களில் நடைபெறவில்லை. அதனால் பூர்வீக நிலத்தினில் பட்டா மற்றும் வேறு யாரோ ஒருவருடைய பெயர் உள்ளது என்றால் அதனை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

பூர்வீக நிலத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் :-

✓ தாத்தா உடைய நிலம் என்றால் அதனை மகன்கள் அல்லது பேரன் / பேத்திகள் பெயரில் மாற்ற வேண்டும் என்றால் பத்திரப்பதிவு செய்த உடனே பட்டாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

✓ தாத்தாவின் உடைய பெயரில் நிலமிருந்தது என்றால் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு நிலத்தினுடைய உரிமையாளர் யார் என்று ஆவணத்தையும் அதற்கு முந்தைய ஆவணத்தையும் நகலெடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.

✓ தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையம் மூலமாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

✓ அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களான உங்களுடைய ஏரியாவானது மாநகராட்சி / கிராமமா என்பதை அறிந்து அதற்குரிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பத்தை 60 கட்டணம் செலுத்தி பதிவு செய்த ரசீதினை மறக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.

✓ சில நாட்கள் கழித்து ரசீதுடன் நில நிர்வாக ஆணையரின் இணையத்திலேயே விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.

✓ உங்களுடைய விண்ணப்பத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது என்றால் அதனை அப்படியே ஒரு நகல் எடுத்துக் கொள்ளலாம். மேலும் அதனுடைய ஒரிஜினல் பட்டாவினை டவுன்லோட் செய்ய தெரியவில்லை என்றால் இ சேவை மையம் மூலம் பட்டாவை டவுன்லோடு செய்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.

குறிப்பு :-

இ சேவை மையங்களில் மூலம் விண்ணப்பிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று பட்டம் பெயர் மாற்றுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் ஆகியோர் நேரில் வந்து பார்த்து சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதி செய்த அதன் பின்னர் தாசில்தார் பட்டா வழங்குவார். ஒருவேளை பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து 15 நாட்கள் உங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்படும்.