Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண் கருவளையத்தை மறைய வைக்கும் நேச்சுரல் க்ரீம்!! ஒருமுறை பயன்படுத்தினாலே கருப்பு நீங்கும்!!

இன்றைய காலத்தில் லேப்டாப்,மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.பெரியவர்களை விட குழந்தைகளே தற்பொழுது மொபைல் போனிற்கு அடிமையாகி வருகின்றனர்.இதனால் உரிய நேரத்தில் தூங்காமல் கண் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து வருகின்றனர்.

கண்களுக்கு உரிய ஓய்வு கிடைக்காவிட்டால் கண் எரிச்சல்,கண்களை சுற்றி கருவளையம் போன்றவை ஏற்படக் கூடும்.இந்த கருவளையம் தோன்றினால் நம் முகம் அழகு குறைந்துவிடும்.எனவே கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைய இங்கு சொல்லப்பட்டுள்ள அழகு குறிப்பை தொடர்ந்து செய்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை துண்டுகள் – 10
2)ஆரஞ்சு தோல் – ஒன்று
3)உருளைக்கிழங்கு பீஸ் – ஒன்று
4)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் பத்து கற்றாழை துண்டுகளை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

2.இதற்கு முன்னர் ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் நன்கு காயவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

3.அதன் பிறகு ஒரு உருளைக்கிழங்கு பீஸை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

4.இந்த சாறை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு கற்றாழை துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து உருளைக்கிழங்கு சாறில் இந்த கற்றாழை பேஸ்டை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

5.அடுத்து அரைத்து வைத்துள்ள ஆரஞ்சு பழ தோல் பவுடர் ஒரு தேக்கரண்டி அளவு போட்டு நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.

6.இறுதியாக ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து கண்களை சுற்றியுள்ள கருவளையத்தின் மீது அப்ளை செய்து நன்றாக காய வைக்க வேண்டும்.

7.பின்னர் குளிர்ந்த நீரில் காட்டன் பஞ்சை நினைத்து கண்களை சுற்றி ஒத்தி எடுக்கவும்.இவ்வாறு தினமும் இருமுறை இந்த பேஸ்டை அப்ளை செய்து வந்தால் சில தினங்களில் கருவளையம் மறைந்துவிடும்.

Exit mobile version