இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! முடி பயங்கர சாஃப்டாக மாற இந்த முறையை பாலோ செய்யுங்கள்!! விரைவில் மாற்றம் உண்டாகும்!

0
149
#image_title

இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! முடி பயங்கர சாஃப்டாக மாற இந்த முறையை பாலோ செய்யுங்கள்!! விரைவில் மாற்றம் உண்டாகும்!

நம்மில் பெரும்பாலானோருக்கு தலைமுடி அழகாகவும்,பளபளப்பாகவும் வைத்திருக்க அதிக விருப்பம் இருக்கும்.அதற்கு தலைக்கு குளித்த உடன் கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.நாம் அவ்வாறு உபயோகிக்கும் கண்டிஷனர் ரசாயன பொருட்களாக இல்லாமல் இயற்கை முறையில் செய்த ஹேர் கண்டிஷனராக இருந்தால் நமக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது.

இயற்கை ஹேர் கண்டிஷனர் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்:

*ஆலிவ் ஆயில் – 1 தேக்கரண்டி

*முட்டை – 2 –

*எலுமிச்சை சாறு – 1/4 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

*வினிகர் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

1.ஒரு பவுல் எடுத்து அதில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றவும்.

2.பிறகு அதில் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு நன்கு சேர்த்து கலக்கவும்.

3.அதனை தொடர்ந்து ஆலிவ் ஆயில் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றி கொள்ளவும்.

4.இதை கூந்தல் முழுக்க தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு நன்கு அலசி கொள்ளவும்.

*முட்டை ஒரு நல்ல ஹேர் கண்டிஷனராக செயல்படும் தன்மை கொண்டது.

*எலுமிச்சை சாறு தலையில் உள்ள பொடுகை போக்க உதவுகிறது.

*தேன் முடிகளுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது.

*ஆலிவ் ஆயில் தலைமுடியை மென்மையாக மாற்றுவதோடு நீளமாகவும்,அடர்த்தியாகவும் வளர்க்க செய்கிறது.