Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளை முடியை கருகருன்னு மாற்றும் இயற்கை ஹேர் டை!! இனி செலவு செய்து கெமிக்கல் ஹேர் டை வாங்க வேண்டாம்!!

உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடியை கருப்பாக மாற்ற இங்கு தரப்பட்டுள்ள இயற்கை ஹேர் டை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)மருதாணி இலை – ஒரு கைப்பிடி
2)கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
3)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
4)கருஞ்சீரகம் – இரண்டு தேக்கரண்டி
5)டீத்தூள் – மூன்று தேக்கரண்டி
6)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை மேல சொல்லப்பட்டுள்ள அளவுபடி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு இதை வாணலி ஒன்றில் போட்டு அடுப்பில் வைத்து பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பிறகு அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் ஒரு கைப்பிடி மருதாணி இலையை [போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.கறிவேப்பிலை மற்றும் மருதாணி இலை பொடியாக நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

ஸ்டெப் 04:

அடுத்து இந்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு மூன்று தேக்கரண்டி டீத்தூளை அதில் போட்டு குறைந்த தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.இரண்டு டம்ளர் தண்ணீர் சுண்டி முக்கால் டம்ளர் வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

ஸ்டெப் 05:

பிறகு இந்த தேயிலை தண்ணீரை நன்றாக ஆறவைத்து வடித்து அரைத்த கறிவேப்பிலை கலவையில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 06:

இந்த கலவையை இரவு மூன்று மணி நேரத்திற்கு மேல் ஊறவைத்த பிறகு பயன்படுத்தலாம்.

ஹேர் டை பயன்படுத்தும் முறை:

முதலில் தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து தயாரித்து வைத்துள்ள ஹேர் டையை தலைமுழுவதும் மயிர்க்கால்களில் படும்படி தடவ வேண்டும்.

இதை ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு தலையில் ஊறவைக்க வேண்டும்.பிறகு மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் தலையில் உள்ள வெள்ளை முடி இயற்கையான முறையில் கருமையாகும்.

Exit mobile version