Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் ஓடாதிங்க! இயற்கை முறையை பயன்படுத்தி வீட்டிலேயே நோயை குணப்படுத்துங்க!

நாம் அன்றாடம் வாழ்வில் நிறைய நோய்களையும் நிறைய பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறோம்.அது சிறிய விஷயமாக இருந்தாலும் சரி, எதற்கு எடுத்தாலும் டாக்டரிடம் சென்று பணத்தை செலவழிக்காமல் ஒருசில இயற்கை வழி முறையை பயன்படுத்தி வீட்டிலேயே வரும் முன் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

1. உடல் அசதி இருந்தால் முருங்கைக் கீரையை காம்புடன் சேர்த்து ரசம் வைத்து குடித்து வர அசதி குறையும்.

2. தொண்டை வலி, தொண்டை அடைப்பு உள்ளவர்கள் பசும்பாலில் ஓமம் சேர்த்து காய்ச்சி காலையில் குடித்து வர தொண்டை வலி குணமடையும்.

3. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இஞ்சி சாற்றை கொதிக்க வைத்து சம அளவு தேன் சேர்த்து இரவு உணவுக்குப் பின் குடித்துவர உடல் பருமன் குறையும்.

4. வயிற்றுப்போக்கு போக இஞ்சியை இடித்து சாறு பிழிந்து அதில் உப்பு சேர்த்து குடிக்க வயிற்று பேதி நிற்கும்.

5. உதடு சிவப்பு நிறமாக மாற ஆசைப்படும் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புதினா இலை, கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து உதட்டில் பூசி வர உதடு சிவப்பாகும்.

6. அல்சரால் வரும் வாய் புண் குணமாக கசகசாவை தூளாக்கி பசும்பால் கலந்து இரவு வேளையில் சாப்பிட்ட பின் இதை குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.

7. அன்னாசி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் கண் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது. அதனால் கண்ணில் எப்பேர்ப்பட்ட நோய் வந்தாலும் அன்னாசிப் பழத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது கண் பிரச்சனை சரியாகும்.

8. பித்தவெடிப்பு குணமாக மருதாணி இலையை எடுத்து சிறிது தயிர்விட்டு நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடத்தில் பூசி வர வெடிப்பு மறையும்.

9. ஜவ்வரிசியை சாதம் போல் வடித்து உப்பு சேர்த்து, மோரில் கலந்து குடித்து வர வயிற்றுப் பொருமல் குறையும்.

10. பாடாய்படுத்தும் மூல நோய் குணமாக வல்லாரை கீரையை தேங்காய்ப்பால் மற்றும் சீரகம், மிளகு சேர்த்து அடிக்கடி சமைத்து உண்டு வர மூலம் குணமாகும்.

11. இரத்த கொதிப்பு நீங்க இரவில் பாலில் 2 பல் பூண்டை தட்டி போட்டு காய்ச்சி இரவில் குடித்து வர ரத்த கொதிப்பு குறையும் மற்றும் கொழுப்பு குறையும்.

12. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று கோளாறுகள் நீங்க மஞ்சனத்தி இலை உடன் சிறிது பூண்டு, வெங்காயம்,மஞ்சள் சேர்த்து காய்ச்சி ஒரு சங்கு அளவு குழந்தைகளுக்கு மூன்று நாட்கள் கொடுத்து வர மந்தம் குணமாகும்.

13. கண்ணில் நீர்வடியும் பிரச்சனைக்கு அகத்திக் கீரையை சூப் செய்து குடித்தால் சரியாகும்.

14. நரம்பு தளர்ச்சி குணமாக வசம்பை எடுத்து பொடியாக்கி 2 கிராம் அளவிற்கு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

15. பெண்களை வாட்டும் ரத்த சோகை நோய்க்கு மாதுளம் பழம் சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை குணமாகும்.

16. கடலை மாவுடன் வெந்தயத்தை சேர்த்து முகத்தில் தடவி வர பருக்கள் மறையும்.

17. பிரண்டையை எடுத்து பிழிந்து மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து காய்ச்சவும். காய்ச்சிய பின் சூடு குறைந்ததும். சுளுக்கு உள்ள இடத்தில் இந்த எண்ணெயை தடவினால் சுளுக்கு குணமாகும்.

Exit mobile version