Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூட்டு வலி, வயிறு வலி சரியாகனுமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

*சுத்தமான மஞ்சள்தூளை தயிரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். அல்லது வெந்நீருடன் சர்க்கரை மற்றும் நெய் கலந்து குடித்தாலும் வயிற்று வலி சரியாகும்.

*தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் தேங்காய்ப்பாலுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

*தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அதை ஆறவிட்டு மூட்டுக்களில் தேய்த்து வந்தாலே போதும் மூட்டு வலி விரைவில் சரியாகும்.

*ஜவ்வரிசியை வேகவைத்து அதில் மோர், உப்பு கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும். மேலும், வயிற்று வலியும் சரியாகும்.

*குப்பைமேனி இலைகளுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு இருக்கும் இடங்களில் தேய்த்து வந்தால் சீக்கிரமாக சரியாகும்.

Exit mobile version