Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடிக்கடி தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்களா..? உடனடி நிவாரணம் வேண்டுமா..? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்..!!

தலைவலி என்பது தலை, கழுத்து மற்றும் உச்சந்தலையில் வலி ஏற்படுத்தும் பொதுவான பிரச்சினையாகும். இந்த தலைவலி வந்துவிட்டால் உங்கள் அன்றாட செயல்களை மிகவும் கடினமாக்கிவிடும்.

மன அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், போதுமான அளவு தூக்கம் இல்லாமை, நீண்ட நேரம் கணினி, செல்போன் உபயோகிப்பது, அதிகப்படியான மது பழக்கம், புகைப்பழக்கம் போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட தலைவலி வந்தால் பக்கவிளைவை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் பெரும்பாலானோர் மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், எந்த ஒரு பக்க விளைவையும் ஏற்படுத்தாமல் உங்கள் தலைவலியைப் போக்க சில டிப்ஸ்…

*துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு மற்றும் லவங்கம் சேர்த்து மைய அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குறையும்.

*மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவி வந்தாலும் தலைவலி குறையும்.

*பால் கலக்காத வரகாபியில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

*கிராம்பை நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைபாரம் குறையும்.

*புதினா இலைகளை அரைத்து சாறு எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

*நல்லெண்ணெயுடன் இஞ்சிச்சாறு கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

*கொதிக்கும் நீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி குறையும்.

*சில நேரம் உடலில் தேவையான அளவு நீரில்லாதபோது உடல் சூடேறி தலைவலி உண்டாகும். அப்போது சில டம்ளர் தண்ணீர் குடித்தால் தலைவலி குணமாகும்.

*வெற்றிலை சாற்றில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து நெற்றியில் பூசினால் தலைவலி தீரும்.

Exit mobile version