உங்கள் பற்களில் உள்ள கரையை நொடியில் நீக்கும் அற்புத பொடி!!

0
369
#image_title

ஒரு சிலருக்கு பற்கள் மஞ்சளாக இருக்கும். இனிப்புகள் அதிகம் சாப்பிடுவது, அடிக்கடி குளிர்பானங்கள் அருந்துவது போன்றவை பற்களின் மஞ்சள் கறைக்கு காரணம்.

பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்கி, பற்களை நன்கு வெண்மையாக்கி, வாயில் உள்ள சொத்தை பற்களை சரி செய்து, பல் வீக்கம், பல் ஆட்டம், ஈறுகளில் ரத்தம் கசிதல், வாய் துர்நாற்றம் இதை எல்லாமே சரி செய்யக்கூடிய ஒரு இயற்கையான பற்பொடி எப்படி தயார் செய்து பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.

நாம் காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலை கெமிக்கல்கள் உள்ள பேஸ்டில் பல் துலக்குவதுதான். அதிலிருந்து ஒரு சிறு துளியாவது நம் வயிற்றுக்குள் போகும். இது தினசரி நடக்கும் போது இதனால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆனால் இது இதனால்தான் ஏற்படுகிறது என்பதை நம்மால் நிரூபிக்க முடியாது. ஆனால் நாம் இயற்கையான பற்பொடி தயார் செய்து பயன்படுத்தலாம்.

இதற்கான பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். முதலில் ஒரு ஈரப்பதம் இல்லாத ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் திரிபலா சூரணம் அதாவது நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்று காய்களின் கலவைதான் இந்த திரிபலாசூரணம்.

இதை 50 கிராம் கிண்ணத்தில் போட்டு கொள்ளுங்கள். இதில் வைட்டமின் C உள்ளது. நம் பற்களுக்கு வைட்டமின் C மிகவும் தேவையானது. பற்களில் உள்ள கிருமிகளை அழிக்கவும், பற்களை வென்மையாக்கவும், வாய் துர்நாற்றத்தை சரி செய்யும். ஒரு சிறு துளி வயிற்றில் போனாலும் இது மலச்சிக்கலை சரி செய்யும். சொத்தை பற்களை சரி செய்து, மேற்கொண்டு சொத்தை பற்கள் பரவாமல் தடுக்கும்.

அடுத்ததாக இதில் ஆலம்வேர்ப்பொடி, ஆலம் விழுதுகளின் பொடியை சேர்க்கவும். இது பல் ஆட்டத்தை சரி செய்து, பற்களுக்கு உறுதியை கொடுக்கும். சொத்தை பல் இருந்தாலும் சரியாகி விடும். அடுத்து ஒரு 20 கிராம் அளவிற்கு கருவேலம்பட்டை பொடி, இதில் ஆலம்வேர் பொடியில் உள்ள மருத்துவ குணங்கள் அனைத்தும் இதில் உள்ளது.

பிறகு 20 கிராம் அளவிற்கு வேப்பிலை பொடி சேர்த்து கொள்ளவும். இது ஒரு நல்ல கிருமி நாசினி. வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். ஈறுகளில் வரும் இரத்த கசிவை நீக்கும். இதனுடன் 10 கிராம் அளவிற்கு கிராம்பு பொடியை சேர்க்கவும். இந்த கிராம்பு பொடியானது சொத்தை பற்களினால் வரும் வலி, வீக்கம் ஆகியவற்றை சரி செய்யும். எதிர்காலத்தில் சொத்தை பற்கள் வராமல் தடுக்கும்.

கூடவே 10 கிராம் அளவில் இந்துப்பு எடுத்து கொள்ளவும். இந்துப்பு இல்லையென்றால் கல் உப்பை பொடி செய்து போட்டு கொள்ளலாம். டேபிள் சால்ட் என்று சொல்லக்கூடிய தூள் உப்பை பயன்படுத்த வேண்டாம். மேற்கூறிய அனைத்து பொடிகளையும் நன்றாக கலந்து கொண்டு, ஈரப்பதம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும்.

இந்த பொடியை சிறிதளவு எடுத்து விரல்களால் பற்களை தேய்க்கவும். பிரஷ்ஷில் தேய்ப்பதை விட விரல்களில் தேய்ப்பது மிகவும் ஆரோக்கியமானது. விரல்களால் மெதுவாக பற்கள் மற்றும் ஈறுகளில் தேய்க்கவும். இந்த பொடியை கொண்டு தேய்ப்பதால் முதலில் பற்களில் உள்ள மஞ்சள் கறை, பற்களில் உள்ள காரைகளை நீக்கி பற்கள் நன்கு வெண்மையடைவதை கண்கூடாக பார்க்கலாம்.

அடுத்ததாக வாய் துர்நாற்றத்தை சரி செய்து, வாயில் உள்ள பாக்டீரியாக்களை போக்கும். இந்த இயற்கை பற்பொடியை பயன்படுத்தி பல்வேறு பற்கள் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.