நமது உடலில் எந்த நோயும் வராமல் இருக்கவும் வந்த நோயை விரட்டி அடிக்கவும் ஆகச் சிறந்த மருந்து நமது உணவு முறையாகும்.
ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் சேர்க்கும்போது அதன் இயற்கை பன்பு சற்றே மாறும்.அதேபோன்று எந்த ஒரு இயற்கை உணவோடும் இன்னொரு உணவைச் சேர்க்கும்போது அது மூலிகை மருந்தாக மாறுகிறது. எந்த உணவை எந்த உணவோடு உணவோடு சேர்க்கும்போது சளிக்கு மருந்தாக பயன்படுகிறது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
ஒரு டம்ளர் அன்னாச்சி சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மற்றும் சளித்தொல்லை குணமாகும்.
ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால் சளி இரும்பல் தொண்டைவலி போன்றவற்றிலிருந்து விடு பெறலாம்.
மாட்டுப் பாலை நன்கு கொதிக்கவைத்து அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலம் உடல் பருமன் ஆவதோடு சளி,இரும்பல் தொல்லையும் நீங்கும்.
வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன்மூலம் இரும்பல் மற்றும் சளியில் இருந்து வீடு பெறலாம்.
கொய்யாப்பழத்தை மிளகுத்தூள் தொட்டு சாப்பிட நுரையீரலில் உள்ள சளி வெளியேறி இரும்பல் பிரச்சினையிலிருந்து தீர்வு கிடைக்கும்.
இலைச் சாறை எடுத்து தேன் கலந்து குடித்தாலும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.