இரத்த மூலத்தால் அவஸ்தை படுபவர்களா? இதோ உங்களுக்கான தீர்வு
இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் இரத்த மூலத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கெல்லாம் இயற்கையில் கிடைக்கும் பிரண்டை வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.
பிரண்டையின் மருத்துவ குணங்கள் நிறைய இருந்தாலும் இரத்த மூலத்தை குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
பிரண்டை வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை.பிரண்டை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
பிரண்டையை தொடர்ந்து சாப்பிட்டு உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.
பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும். மாதவிடாய் ஒழுங்காகும்.
குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது.
உடலைத் தேற்றும், பசியைத் தூண்டும்; மாதவிலக்கைத் தூண்டும்; மந்தம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றையும் பிரண்டை குணமாக்கும்.