சாலை தகராறு மரண வழக்கில் 10 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்த நபர் விடுவிப்பு!!

0
244
#image_title

சாலை தகராறு மரண வழக்கில் 10 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்த நபர் விடுவிப்பு!!

நாட்டில் ஜனநாயகம் என்பது தற்போது இல்லை, பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது- நவ்ஜோத் சிங் சித்து….

நாட்டில் சர்வாதிகாரம் வரும்போதெல்லாம், அதற்கு எதிராக புரட்சியும் வந்துள்ளது. இந்த முறை அந்த புரட்சி ராகுல் காந்தியாக வந்துள்ளது, ஆட்சியை ராகுல் காந்தி உலுக்குவார்- நவ்ஜோத் சிங் சித்து….

பஞ்சாபை பலவீனமடைய செய்வதால், அவ்வாறு செய்பவர்களே பலவீனமடைவார்கள்- நவ்ஜோத் சிங் சித்து….

1988-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை தகராறு மரண வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அமர்வு நவ்ஜோத் சிங் சித்துவுக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, ரூ. 1000 அபராதம் விதித்து கடந்த 2018 ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி தீர்ப்பு கூறியது.

 

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, சாலை தகராறில் மரணமடைந்த குடும்பத்தார் சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சாலை தகராறு மரண வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துவின் தண்டனை குறைப்புக்கு எதிரான மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பு கூறியது.

சிறை தண்டனை இன்று நிறைவடைந்த நிலையில்
நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் ஜனநாயகம் என்பது தற்போது இல்லை, பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பஞ்சாபை பலவீனமடைய செய்வதால், அவ்வாறு செய்பவர்களே பலவீனமடைவார்கள். நாட்டில் சர்வாதிகாரம் வரும்போதெல்லாம், அதற்கு எதிராக புரட்சியும் வந்துள்ளது. இந்த முறை அந்த புரட்சி ராகுல் காந்தியாக வந்துள்ளது, ஆட்சியை ராகுல் காந்தி உலுக்குவார் என தெரிவித்தார்.