ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு நவராத்திரி ஸ்பெசல் அறிவிப்பு!!! சிறப்பு உணவுகளை வழங்க ஜொமேட்டோவுடன் கைகோர்த்த ஐ.ஆர்.சி.டி.சி!!!

0
86
#image_title

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு நவராத்திரி ஸ்பெசல் அறிவிப்பு!!! சிறப்பு உணவுகளை வழங்க ஜொமேட்டோவுடன் கைகோர்த்த ஐ.ஆர்.சி.டி.சி!!!

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நவராத்திரி சிறப்பு உணவுகளை வழங்குவதற்கு ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோவுடன் இணைந்துள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தேவையான உணவுகளை ஆன்லைன் டெலிவரி மூலமாக வழங்கும் வேலையை செய்து வருகின்றது. இந்நிலையில் ஜொமேட்டோவுடன் இணைந்துள்ள ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் பயணிகளுக்கு பலவிதமான உணவு வகைகளை வழங்கவுள்ளது.

இதன் மூலமாக பயணிகளுக்கு சிறப்பான பயண அனுபவத்தை அளிக்கும் விதத்தில் இந்த கூட்டணி சேர்ந்துள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் புது டெல்லி, பிரயாக்ராஜ், லக்னோ, வாரணாசி, கான்பூர் ஆகிய ஐந்து நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கூரிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் ஜொமேட்டோ செயலியின் உதவியுடன் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் இ-கேட்டரிங் போர்ட்டல் மூலமாக உணவுகளை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

தற்பொழுது இந்தியாவில் நவராத்திரி பண்டிகை களைகட்டியுள்ளது. இதையடுத்து பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பான உணவுகளை வழங்க ஐ.ஆர்.சி.டி.சி முடிவெடுத்து உள்ளது. மேலும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு பல சிறப்பு சலுகைகளும் அறிவிக்க ஐ.ஆர்.சி.டி.சி திட்டமிட்டுள்ளது.

மேலும் நவராத்திரி விரதம் இருக்கும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் நவராத்திரி தின சிறப்பு உணவு வகைகளை பயணிகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றது.