பாகிஸ்தான் என்பது எப்போதுமே நமக்கு துன்பம் விளைவிக்கும் விதத்திலேயே செயல்பட்டு வரும் ஒரு நாடு.அந்த நாட்டிடம் பெரிய அளவில் ராணுவ பலமில்லை என்றாலும் அந்த நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவரும் மறைமுகமாக தீவிரவாதத்தை ஆதரித்து தீவிரவாதத்திற்கு உதவி புரிந்து அவர்கள் மூலமாக இந்தியாவை சீர்குலைக்க பலவிதமான சதித் திட்டங்களை தீட்டி வருவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது.
ஆனால் அவர்கள் எத்தகைய சதித் திட்டங்களை தீட்டினாலும் கூட அதிலிருந்து மிகவும் சாமர்த்தியமாக, அதிலும் சாதுரியமாக தப்பித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அதோடு இந்தியாவை சீர்குலைக்க முயற்சிக்கும் அனைவரையும் தூள் தூளாக்கி வருகிறது இந்தியா.
உலக வரலாற்றில் இதுவரையில் இந்தியாவிடம் நேருக்கு நேர் மோதி பாகிஸ்தான் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது என்பது வரலாறு.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானில் சமீபகாலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவை பொதுமக்களை வெகுவாக பாதித்தனர். இதனால் அந்த நாட்டில் போராட்டம் வெடிக்க தொடங்கியது. அதோடு அந்த நாட்டு அரசியல் கட்சிகளும் இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என்று அவருக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கினார்கள்.
மேலும் இம்ரான் கானின் கூட்டணி கட்சியே ஒரு கட்டத்தில் அவர் காலை வாரியது.மேலும் இதுவரையிலான பாக்கிஸ்தான் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அங்கு ஆட்சிக்கு வந்த யாரும் முழுமையாக 5 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தை செலுத்தியது கிடையாது என்கிறார்கள்.
அந்த வரிசையில் இம்ரான்கான் நிச்சயமாக இந்த ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்வார் என்று தொடக்கத்தில் கருதப்பட்டது.ஆனாலும் பாகிஸ்தான் வரலாற்றை மாற்றும் சக்தி அவருக்குமில்லை என்று தற்போது தெரியவந்திருக்கிறது.
அதாவது, பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுவதில் தாமதம் நிலவி வந்தது.
இந்த நிலையில், அந்த நாட்டு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கைசர் மதிப்பளித்து நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒரே நாளில் சபை பல ஒத்தி வைப்புகளை சந்தித்தது என சொல்லப்படுகிறது.
ஆகவே நள்ளிரவு சமயத்தில் இம்ரான்கானை பிரதமர் பதவியிலிருந்து நீக்க அந்நிய சக்தியின் சதியில் ஒரு அங்கமாக நான் இருக்க விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்து சபாநாயகர் பதவி விலகினார். அவருடைய வழியில் துணை சபாநாயகர் காசிம் சூரியும், பதவி விலகினார்.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் ( நவாஸ்) கட்சியை சார்ந்த அயாஸ் சாதிக் சபைக்குத் தலைமை வகித்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தினார் என்று சொல்லப்படுகிறது.
இந்த வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 342 நாடாளுமன்ற உறுப்பினர்களில் நூத்தி 174 பேரின் ஆதரவுடன் நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக, இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டது, ஆகவே அவருடைய அரசு கவிழ்ந்தது.
அந்த நாட்டின் வரலாற்றில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேறி பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயரை இம்ரான்கான் பெற்றார்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தற்காலிக சபாநாயகராக இருந்து சபையை வழிநடத்திய அயாஸ் சாதிக் நம்பிக்கையில்லாத தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவித்ததைத் தொடர்ந்து அங்கே அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் விரிவடைய தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிடுவோர் நேற்றைய தினம் 2 மணிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் 3 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.
அதோடு திங்கள் கிழமையான இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடி புதிய பிரதமரை தேர்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. முதலில் இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றம் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு நாடாளுமன்றம் கூடுவது மதியம் 2 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அங்கே பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஸபாஸ் ஷெரிப் நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்ரான்கான் பாகிஸ்தான் தெஹ்ரிக் ஈ இன்சாப் கட்சியின் சார்பாக அந்த கட்சியின் துணை தலைவர் ஷா மக்முத் குரேஷி வேட்பு மனு தாக்கல் செய்தார், இருவருடைய வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஷபாஸ் ஷெரிப் தெரிவித்ததாவது, தேசிய நல்லிணக்கம் தான் என்னுடைய முதன்மையாக இருக்கும், நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்திய பின்னர் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்து புதிய அமைச்சரவை அமைக்கப்படும். ஒரு புதிய சகாப்தம் ஆரம்பிப்போம் பரஸ்பரம் மரியாதைக்குரிய கலாச்சாரத்தை நாடு முழுவதும் வளர்ப்போம் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இந்தியாவுடன் நாங்கள் அமைதியை விரும்புகிறோம் ஆனாலும் காஷ்மீர் பிரச்சனையை முழுவதுமாக தீர்க்காமல் அது சாத்தியப்படாது என்று அவர் கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் கூடவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடைய வேட்புமனு தாக்கல் ஏற்கப்பட்ட நிலையில், இம்ரான்கான் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக அந்த கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் தகவல் துறை அமைச்சருமான பவாத் சவுத்திரி தெரிவித்திருக்கிறார்.