Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குல தெய்வ கோவிலுக்கு செல்ல நயன்தாரா – விக்ணேஷ் சிவன் தம்பதியினர் திருச்சி வருகை

#image_title

குல தெய்வ கோவிலுக்கு செல்ல நயன்தாரா – விக்ணேஷ் சிவன் தம்பதியினர் திருச்சி வருகை

திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் ,நடிகை நயன்தாரா விற்கும் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து இவர்கள் இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துக் கொண்டனர்.

அதில் ஒரு ஆண் குழந்தைக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன் (Uyir Rudronil N Shivan) என்றும், மற்றொரு ஆண் குழந்தைக்கு உலக் தெய்விக் N சிவன் (Ulag Deivik N Shivan) எனவும் பெயர் சூட்டி இருப்பதாக விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலவழுத்தூரில் உள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு செல்வதற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தனர். திருச்சி விமான நிலையத்தில் ரசிகர்கள் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து கார் மூலம் அவர்கள் கும்பகோணம் புறப்பட்டு சென்றனர். அவர்கள் குழந்தைகளை தங்களுடன் அழைத்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version