Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மோகன்லால் பேசியபோது அவரை எதிர்த்த நயன்தாரா!!

“லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது இரு குழந்தைகளுடன், கெரியரையும் மிக அழகாக கவனித்து வருகிறார்”. இவரது ஆரம்ப காலகட்டம் அவ்வளவு எளிமையாக அமையவில்லை. பிரபல இயக்குனர் ஃபாஷில் தயாரிப்பில், முதலில் விஸ்யதும்பது என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து, ஃபாசில் நீங்கள் சரியாக ரியாக்ஷன் தரவில்லை. உள்ளிருந்து எமோஷனலாக நடிக்கவில்லை என என்னை திட்டி உள்ளார். இப்படத்தில் என்னுடன் மோகன்லால் சாரும் நடித்திருந்தார். அவர் என்னிடம் ‘நீ இன்னும் கேரக்டருக்குள் செல்ல வேண்டும்.அப்போதுதான் உன்னால் இயல்பாக நடிக்க முடியும்’ என சொல்லிக் கொண்டே இருப்பார்.

அவர் அப்போது அடிக்கடி சொல்லுவார். ஃபாசில் சாரும் என்னை திட்டிக்கொண்டே இருப்பது அப்போது எனக்கு மிகுந்த பயத்தை அளித்தது. நான் மோகன்லால் சாரிடம், ‘இதில் உள்ள டயலாக் புரியவில்லை. அதனால் எனக்கு பயமே ஏற்படுகிறது’ என்றேன். அவர் ‘சிறிது நேரம் ஓய்வெடு’ என்று சொல்லிவிட்டு சென்றார்.

அதன் பின் ஃபாசில் சாரும், “இது உன்னால் இன்னும் அழகாக செய்து முடிக்க முடியும்” என நம்புவதாக கூறினார். மலையாளத்தில் அப்ப படத்தை நடித்து முடித்தேன். அவ்வாறு பல கஷ்டங்களை தாண்டி வந்துள்ளேன் எனவும் கூறியுள்ளார் நயன்.

Exit mobile version