Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நயன்தாராவின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா!

தென்னிந்தியா திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற மூன்று வகையான திரையுலகிலும் இப்பொழுது முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடன் அண்ணாத்தே திரைப்படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்றிருக்கின்றார் ஹைதராபாத்தில் நயன்தாராவின் காதலர் தற்போது இயக்கி வரும், காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருகின்றார். அதோடு விக்னேஷ் சிவனின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் இந்துமதத்தில் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்து வருகின்றது. கொரோனா பரவுவதற்கு முன்னர் வரையில் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் ஒன்றிணைந்து, கோவில் கடற்கரை போன்ற இடங்களில் பொழுதை கழிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.. அவருடைய திரைப்படங்கள் தொடர்பான முடிவை எடுப்பதற்கு கூட ஜாதகத்தை கணித்து விட்டுத்தான் முடிவை அறிவிப்பார் அந்த அளவிற்கு நயன்தாராவிற்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது.

அதோடு நயன்தாரா அவருடைய திருமணத்தை தள்ளிப் போடுவதற்கு கூட ஜாதகம் தான் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலே நயன்தாரா பல படங்களில் நடித்திருந்தாலும், ஒரு விஷயத்தை யாரும் கவனித்திருக்க மாட்டீர்கள்.

அது என்னவென்றால், அவருடைய இடது கை ஆறு விரல்களை கொண்டிருக்கும். இது போன்ற அமைப்பு மிக அரிதானவர்களுக்குத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். கைகளில் ஆறாவது விரல் இருப்பவர்கள் புத்திசாலியாகவும், அதேநேரத்தில் அதிர்ஷ்டக்காரர்களாகவும் இருப்பார்கள் என்று ஜோதிட ரீதியில் சொல்லப்படுகின்றது

Exit mobile version