முதல் முறையாக நயன்தாரா மற்றும் திரிஷா நடிக்கும் திரைப்படம்! கூடிய விரைவில் வெளி வரவுள்ள அறிவிப்பு !!

0
142
#image_title
முதல் முறையாக நயன்தாரா மற்றும் திரிஷா நடிக்கும் திரைப்படம்! கூடிய விரைவில் வெளி வரவுள்ள அறிவிப்பு
நடிகை நயன்தாரா மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனதால் இருந்து தற்பொழுது வரை கதாநாயகிகள் கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிகை நயன்தாரா, நடிகை திரிஷா இருவரும் நடித்து வருகின்றனர். இதுவரை முன்னனி நடிகைகளாக இருக்கும் திரிஷா, நயன்தாரா இருவரும் நடித்து வந்தாலும் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட நடித்தது கிடையாது. தற்பொழுது முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக நடிக்கவுள்ள கேஹெச் 234 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை திரிஷா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் 234வது திரைப்படத்தின் டீசர் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தற்பொழுது கிடைத்துள்ள தகவல்கள் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
அதாவது நடிகை திரிஷா அவர்கள் கேஹெச் 234 திரைப்படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தில் அட்வான்ஸ் தொகை வாக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் நடிகை திரிஷா அவர்கள் கேஹெச் 234 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகி இருக்கின்றது.
எனினும் நடிகை நயன்தாரா அவர்கள் கேஹெச் 234 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடிப்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.