Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தை  விவகாரம்! அமைச்சரின் பதில்!

Nayanthara and Vignesh Shivan's twins are a controversial issue! Minister's answer!

Nayanthara and Vignesh Shivan's twins are a controversial issue! Minister's answer!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தை  விவகாரம்! அமைச்சரின் பதில்!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் விக்னேஷ் சிவன் நேற்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது எனவும் பதிவிட்டிருந்தார்.மேலும் இவர்கள் வாடகை தாய் மூலமாக இந்த இரண்டு ஆண் குழந்தைகளை பெற்று இருகின்றார்கள் என கூறப்படுகின்றது.ஆனால் இது குறித்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தார தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் இந்த விவகராம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து  இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.அப்போது அவர் 21 வயது முதல் 36 வயதுடையவர்கள் தான் சினைமுட்டை தானம் செய்ய வேண்டும்.அதனால் விதிமுறையை பின்பற்றி தான் நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன்  இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்களா என பொது சுகாதாரதுறை மூலம் விளக்கம் கேட்கப்படும் எனவும் பதிலளித்தார்.

Exit mobile version