Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அம்மன், முருகன் கோவில்களுக்கு காதலனுடன் விசிட் அடித்த பிரபல நடிகை

அம்மன், முருகன் கோவில்களுக்கு காதலனுடன் விசிட் அடித்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தில் கடந்த பல ஆண்டுகளாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இன்று கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்

இன்று காலை அவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றதாகவும் அந்த கோவிலில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த கோவில் நிர்வாகிகள் பிரசாதம் கொடுத்து பாதுகாப்புடன் வழி அனுப்பி வைத்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது கன்னியாகுமரி கோவிலுக்கு நயன்தாரா வந்திருக்கும் செய்தி தெரிந்ததும் அப்பகுதியில் உள்ள ரசிகர்கள் பெருமளவில் அவரைப் பார்க்கக் கூடிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது

கன்னியாகுமரியில் சாமி தரிசனத்தை முடித்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் அங்கிருந்து நேராக திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். அதன் பின்னர் சென்னை திரும்பினார்.

நயன்தாரா சமீபத்தில் தர்பார் என்ற படத்தை முடித்துவிட்டு தற்போது நெற்றிக்கண் மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதை அடுத்து அவர் அம்மன் கோவிலுக்கு சென்று உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நெற்றிக்கண் மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களை அடுத்து நயன்தாரா வேறு படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளாததால் இந்த இரு படங்களை முடித்துவிட்டு அவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Exit mobile version