தனுஷை அசிங்கப்படுத்த திருமண விழாவிற்கு வந்த நயன்தாரா!! நீலாம்பரியை மிஞ்சிய ராக்காயி!!

0
166
Nayanthara came to the wedding ceremony to humiliate Dhanush!! Rakai surpassing Neelambari!! Nayanthara came to the wedding ceremony to humiliate Dhanush!! Rakai surpassing Neelambari!!

Cinema News: நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒரு காலத்தில் மிக சிறந்த நண்பர்களாக திரையுலகில் வலம் வந்தார்கள். ஆனால் இவர்களின் நட்பு பிரிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியிட வந்த பிரச்சனை ஆகும். இந்த திரைப்படத்தை வெளியிட தனுஷ் சுமார் ரூ.100 கோடி கேட்டதால் இருவருக்கும் பல பிரச்சனைகள் வந்தது. அதனால் நயன்தாரா தனுஷுக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதியது அனைவருக்கும் தெரியும் .

இந்த பிரச்சனைக்கு பிறகு தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் எப்படி சந்தித்து கொள்வார்கள் என பல கேள்விகள் எழுந்த நிலையில், இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணத்திற்கு அவர்கள் இருவரும் சென்றுள்ளார்கள். அந்த திருமண விழாவில் நயன்தாரா அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல், நேராக சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியிடம் சென்று ஏதோ பேசியுள்ளார். அப்போது நிகழ்ச்சி அமைப்பாளரை அழைத்து எனக்கு தனுஷ் அருகே இருக்கை வேண்டும் என கேட்டுள்ளார். அதனால் நயன்தாராவே இப்படி கேட்க அவருக்கு தனுஷ் அருகில் இருக்கை கொடுத்துள்ளனர்.

அப்போது நயன்தாரா தனுஷ் பக்கம் பார்த்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாராம். அது மட்டும் அல்லாமல் நயன்தாராவின் கூட வந்த ஆட்களிடம் தனுஷ் பக்கத்தில் இப்படி அமர்ந்திருப்பதை போட்டோ எடுக்க சொல்லி அதை சமூக வலைதளங்களிலும் போட சொல்லி உள்ளார் என கூறப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதை பார்த்த நெட்டிசன்கள் நீலாம்பரியின் திமிரின் உச்சம் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.