Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஷாருக்கான் திரைப்படத்திலிருந்து நயன்தாரா விலகலா.? இதுதான் காரணமா? அதிர்ச்சியில் அட்லி!!

இயக்குனர் அட்லீ இயக்கி ஷாருக்கான் நடிக்கும் என்ற திரைப்படத்தில் இருந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விலகப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

உதவி இயக்குனராக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் பணிபுரிந்தவர் தான் அட்லி. முதன் முதலில் இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தை தானாகவே இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

தனது முதல் படத்திலேயே அவர் ஹீரோயினாக நயன்தாரா மற்றும் நஸ்ரியாவை வைத்து படம் எடுத்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக தெரிவித்த நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை.

அதன்பின்னர் அட்லி நடிகர் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கினார். மேலும் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களை தொடர்ந்து இயக்கினார். இத்தகைய நிலையில் தற்போது அவர் யாரும் எதிர்பாராத நிலையில் ஷாருக்கானுடன் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி ஆச்சரியம் கொடுத்தது.

தற்போது இந்தப் படத்துக்கான வேலைகளில் ஷாருக்கான் மற்றும் அட்லி ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகின்றார் இத்தகைய சூழலில் போதைப்பொருள் விவகாரத்தில் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே ஷாருக்கான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் போய்விட்டார்.

இதனால் இந்த படப்பிடிப்பில் ஷாருக்கான் கலந்து கொள்ளாமல் போவது நயன்தாராவின் கால்ஷீட்டுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு தாமதமாவதால் நயன்தாராவின் மற்ற படங்களுக்கு பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது எனவே இந்த படத்தில் இருந்து விலகிவிட நயன்தாரா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது நடிகை நயன்தாரா அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் காத்துவாக்குல 2 காதல், ஜிஎஸ் விக்னேஷ் படம், சிரஞ்சீவியின் காட்பாதர், கோல்டு, யுவராஜ் தயாளன் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version